SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் திறந்தும் பஸ்கள் வருவதில்லை ரூ.3 கோடி மதிப்பு பஸ்ஸ்டாண்ட் பாராகும் அவலம்

4/22/2019 5:06:40 AM

சின்னமனூர்  நகராட்சி மெத்தனம் சின்னமனூர், ஏப்.22:  நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால், ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சின்னமனூர் பஸ்ஸ்டாண்ட்  திறந்த வெளி பாராக மாறி வருகிறது. எனவே,  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சின்னமனூரைச் சுற்றி  14 கிராம பஞ்சாயத்துகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அத்துடன் ஹைவேவிஸ் உள்ளிட்ட 7 மலைக்கிராம மக்களும் வசிக்கின்றனர். இவ்வளவு மக்களும் அடிப்படை தேவைக்கான அரிசி முதல் காய்கறி வாங்க சின்னமனூருக்குத் தான் வரவேண்டும்.

இதற்காக 1978ம் ஆண்டு நேருஜி பஸ்நிலையம் துவங்கப்பட்டு இயங்கி வந்தது. மெயின் ரோட்டில் 3 இடங்களில் பஸ்நிறுத்தங்கள் ஏற்பட்டதால், பஸ்கள் பஸ்ஸ்டாண்டிற்குள் வருவது கொஞ்சம் கொஞ்சமாக நின்றது. இதனால், பயணிகள் வருகையின்றி பஸ்ஸ்டாண்ட் கடைகள் காலி செய்யப்பட்டன. இதனால் பஸ்நிலையம் முடக்கப்பட்டது. நகர பஸ்கள் மட்டும் பஸ்நிலையத்திற்குள் வந்து திரும்புவதற்கு பயன்பட்டது.
இந்த நிலையில் பஸ்ஸ்டாண்ட் கட்டிடம் வலுவிழந்ததால், 2015ம் ஆண்டு அகற்றப்பட்டது. பின்னர் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நேருஜி புதிய பஸ்நிலையம் கட்டும் பணி துவங்கியது. இரண்டு ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடந்த பஸ்நிலைய பணிகள் முடிக்கப்பட்டு ஆறு மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து தினகரனில் செய்தி படத்துடன் தொடர்ந்து வெளியானது.

இதன் எதிரொலியாக கடந்த 2018ம் ஆண்டு டிச.17ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொளி மூலம் சின்னமனூர் ேநருஜி பஸ்நிலையத்தை திறந்து வைத்தார். ஆனாலும், பஸ்நிலையம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பஸ்ஸ்டாண்ட்டில் கட்டப்பட்ட 40 கடைகளில் 12 மட்டும் ஏலம் போனது. இந்த கடைக்காரர்களிடம் நகராட்சி வாடகை கேட்டதால், ஏற்கனவே 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்த நிலையில், திறக்காத கடைக்கு வாடகை தர முடியாது என கடைக்காரர்கள் சொல்லி விட்டனர். அத்துடன் கடை ேவண்டாம், அட்வான்ஸ் தொகையைத் திருப்பி தரச்சொல்லி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பஸ்நிலையம் உள்ளே ஒரு டீ கடை மட்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒடைப்பட்டி, எரசக்கநாயக்கனூர், போடி போன்ற ஊர்களிலிருந்து சின்னமனூர் வரும் அரசு நகர பஸ்கள் மட்டும் பஸ்நிலையம் வந்து திரும்புகின்றன. ஆனால், பயணிகள் இன்னும் பஸ்நிலைத்திற்குள் வரவில்லை. மேலும், திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்  தொலைதூர அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும்  பஸ்ஸ்டாண்ட்டிற்குள் வருவதில்லை. ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த பஸ்நிலையம் தற்போது குடிமகன்களின் திறந்த வெளி பாராக மாறி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ேநருஜி பஸ்நிலையம் புத்துயிர் பெறும். மேலும் குடிமகன்களிடமிருந்து பயணிகளைக் காக்க சின்னமனூர் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

10 நாட்களுக்குள்...
சின்னமனூர் பஸ்நிலையம் சம்பந்தமாக கமிஷனர் கமலாவிடம் கேட்டபோது,  ``இதுவரையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தோம். இப்பணி நிறைவடைந்துள்ளதால் நேருஜி புதிய பஸ் நிலையத்தை சிறப்பாக செயல்படுத்த சில விதிமுறைகள் கடைபிடித்து நடவடிக்கை எடுக்க போகிறோம். விரைவில் நகராட்சியில் ஆலோசித்து 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

 • 17-05-2019

  17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்