SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழையில்லாததால் மாங்காய் மகசூல் குறைவு வருசநாடு விவசாயிகள் கவலை

4/22/2019 5:06:22 AM

வருசநாடு, ஏப்.22:  வருசநாடு பகுதியில் போதிய மழையில்லாததால் மாங்காய் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வருசநாடு பகுதியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மாங்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் மா பிஞ்சுகள் பழுத்து கீழே விழுந்தது. இதனால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி பரமன் கூறுகையில், `` ஒவ்வொரு ஆண்டும் மா விளைச்சல் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் மரங்கள் சில இடங்களில் பட்டுப் போய்விட்டது. இதனால் விளைச்சல் குறைவாக உள்ளது. ஆனாலும், விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

அப்படி விலையும் கிடைக்காவிட்டால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியது வரும். எனவே, தேனி மாவட்ட மா விவசாயிகள் நலன் கருதி நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார். கடமலை - மயிலை விவசாய சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், வருசநாடு பகுதியில் செந்தூர், காசா, இமாம்ஸ், ராஜபாளையம் சப்போட்டா, கல்லாமாங்காய் போன்ற நாட்டு ரகம் மற்றும் ஒட்டு ரக மாம்பழ விவசாயம் நடைபெறுகிறது. வேளாண்மைத் துறை போதிய விழிப்புணர்வு செய்து வருகிறது. உரம், பூச்சி மருந்தும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இயற்கை சீற்றம் காரணமாக இந்த ஆண்டு மா விவசாயம் மிகவும் பின்தங்கி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்கினால் ஏழை எளிய சிறு, குறு விவசாயிகளுக்கு பேரூதவியாக இருக்கும்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்