SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பண்ணைப்புரத்தில் ரேஷனில் கழிவு அரிசி விநியோகம் கண்டித்து சாலைமறியல்

4/22/2019 5:06:05 AM

உத்தமபாளையம், ஏப்.22:  பண்ணைப்புரத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கழிவுஅரிசி கருப்பாக இருந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்ணைப்புரம் ரேஷன் கடைகளுக்கு நடப்பு மாதத்திற்குரிய புளுங்கல் அரிசி வந்துள்ளது. இது சாப்பாட்டிற்கு தகுதியற்றதாக இருந்தததால் ரேஷன் கடைகளின் ஊழியர்கள் தேர்தல் வரை விநியோகம் செய்யாமலேயே இருந்தனர். மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் ரேஷன் கடைகளில் நேற்று முன்தினம் அரிசி விநியோகம் தொடங்கியது. இதில் பல மூட்டைகளில் சாப்பாட்டிற்கு தகுதியற்ற அரிசியாகவும், கருப்பாகவும் இருந்தததால் பொதுமக்கள் வேறு அரிசி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், ரேஷன் கடைகளை கண்காணிக்கும் சிவில்சப்ளைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை அடுத்து ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்ட அரிசி மாற்றப்படவில்லை. இங்குள்ள 4ம் எண் கடையில் நேற்று முன்தினம் விநியோகிக்கப்பட்ட அரிசி மிக மோசமாக இருந்தது. இதனை மாற்றி வேறு அரிசி விநியோகம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து பண்ணைப்புரம் - தேவாரம் சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்