SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போடி மெட்டு சாலையில் ஆபத்தான வளைவால் அன்றாடம் விபத்து எச்சரிக்கை பலகை தேவை

4/22/2019 5:05:20 AM

போடி, ஏப்.22 :  போடி மெட்டு பரமசிவன் மலைக்கோயில் பிரிவில் உள்ள ஆபத்தான வளைவால் அன்றாடம் விபத்து நடந்து வருகிறது. எனவே, இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். கொச்சின் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக, கேரளா எல்கையில் போடிநாயக்கனூர் உள்ளது. போடியிலிருந்து போடி மெட்டு சாலையில்முந்தல் சாலை இரு புறங்களிலும் ஸ்பைஸஸ் போர்டு அலுவலகம், பெட்ரோல் பல்க், இலவம் தொழிற்சாலைகள், கல்லூரி, தோட்டங்கள் என வரிசையாக உள்ளன. இச்சாலை வழியே தமிழக, கேரளா பஸ்கள் அடிக்கடி கடக்கின்றன. மேலும் விவசாய சம்பந்தமான கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் செல்லும்  வாகனங்களும் தினந்தோறும் இவ்வழியே செல்கின்றனர்.

பரமசிவன்மலை கோயில் பிரிவில் கல்லூரி இருக்கும் பகுதியில் ஆபத்தான வளைவு உள்ளது. மூணாறு குரங்கணியிலிருந்து போடிக்கு வரும் பஸ்கள் உட்பட பல தரப்பட்ட வாகனங்களும் வேகமாக வருவதால்  இந்த ஆபத்தான வளைவில் திரும்பும் போது விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக,  கல்லூரி மாணவ, மாணவியர் அந்த வளைவில் அடிக்கடி கடந்து வரும் போது விபத்தில் சிக்கின்றனர். இந்த வளைவில் கட்டாயமாக இருபுறங்களிலும் எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்