SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யானை குழாய் உடைந்து மின்கம்பம் அளவிற்கு பீய்ச்சியடித்த குடிநீர்

4/21/2019 7:36:21 AM

சின்னமனூர், ஏப். 21: யானை குழாயில்  உடைப்பு ஏற்பட்டதால் மின்கம்ப உயரத்திற்கு குடிநீர் பீச்சி அடித்ததால் ெபாதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் சுக்காங்கல் பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, மேலப்பட்டி சமத்துவபுரம், வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  வசிக்கின்றனர். இவர்களுக்கு உத்தமபாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், முல்லை பெரியாற்று மூலம் வாரம் ஒரு முறை குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டது. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.கடந்த 2006 ம் ஆண்டு திமுக ஆட்சியில் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை முல்லைபெரியாற்று படுகையில் தனியாக உறைகிணறுகள் அமைத்து 11 கி.மீ  தூரம் ராட்சத குழாய்கள் பதித்து 4 நாட்களுக்கு ஒரு முறை வழங்கி முடிவு செய்யப்பட்டது.  அதற்காக 90 லட்சம் செலவில் பணிகள் செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக ஓடைப்பட்டி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளுககு முன்பாக சின்னமனூர் கண்ணாடிமுக்கிலுள்ள யானை குழாயில் வெடிப்பு ஏற்பட்டு இதே போல் தண்ணீர் பீச்சி அடித்து ஆறாக ஓடியது. நேற்று முன்தினம் இரவில் திடீரென சின்னமனூர் கண்ணாடிமுக்கிலுள்ள யானை குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் மின்கம்பம் அளவிற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதுகுறித்து சின்னமனூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் தமிழ்செல்வி கூத்தபெருமாள், ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தார். குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து ஓடைபட்டி செயல் அலுவலர் (கோம்பை பேரூராட்சி பொறுப்பு) ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, `` புதிய யானை குழாய்க்கு ஆர்டர் கொடுத்துள்ளோம் முதற்கட்டமாக குழாய் வெடிப்பு பகுதியினை வெல்ட் அடித்து தயார் செய்து வருகிறோம். குழாய் வந்தவுடன் உடைப்பு பகுதியினை அகற்றி மாற்றி நிரந்தரதீர்வு ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்