SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்பம் கோயிலில் கொள்ளை முயற்சி

4/21/2019 7:35:52 AM

கம்பம், ஏப்.21:  கம்பத்தில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோவில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள கிரில் கேட்டை உடைத்து திருட முயன்றதாக கோயில் கணக்கர் தகவல் கொடுத்தார். இதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மர்மநபர் கிரில் கேட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. எனவே, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும், கோயிலுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. கம்பத்தில் பரபரப்பு மிகுந்த பஸ்ஸ்டாண்டு ரோட்டில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்