SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை அருகே கிரேன் கயிறு அறுந்து பலியான 5 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு தலைமறைவான பள்ளி தாளாளருக்கு வலை

4/21/2019 12:23:07 AM

திருவண்ணாமலை, ஏப்.21: திருவண்ணாமலை அருகே கிணறு தூர்வாரும் பணியின்போது ராட்சத கிரேனின் இரும்பு கயிறு அறுந்து விழுந்ததில் பலியான 5 பேரின் உடல் பிரேத பரிசோதனை முடித்த பின் இறந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கிணறு தூர்வாரும் பணி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், தாமரைபாக்கம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்(49), பிச்சாண்டி(51), ஜெயமுருகன்(28), தணிகாசலம்(50), அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்த வேலு(36) மற்றும் மாணிக்கம்(55) ஆகிய 6 பேர் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென ராட்சத கிரேனில் இருந்த இரும்பு கயிறு அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த மாணிக்கம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் கிணறு தூர்வாரும் பணியை மேற்கொண்ட தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், பள்ளி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் திருவண்ணாமலை- காஞ்சி சாலையில் சடலங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி சிபி.சக்கரவத்தி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சுமார் 3 மணிநேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, தொடர்ந்து போலீசார் 5 பேரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாமரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகன் அளித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் தனியார் பள்ளி தாளாளர், படிஅகரம் கிராமத்தை சேர்ந்த பர்வதம் மற்றும் கிரேன் டிரைவர் மீது வழக்குப்பதிந்து, தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் இரவு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் திருவண்ணாமலை மருத்துவமனையில் இறந்த 5 பேரின் சடலங்களும் நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது, அங்கு வந்த இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர்கள் அம்பேத்வளவன், செல்வம் போலீசாரிடம் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடுபத்திற்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். அப்போது தான் சடலங்களை வாங்குவோம் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இறந்தவர்களின் உறவினர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர், அரசு சார்பில் உரிய இழப்பீடு விரைந்து பெற்று தரவும், குடும்பத்தில் உள்ளவர்களில் தகுதி வாய்ந்த ஒரு நபருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், எஸ்பி சிபி சக்கரவர்த்தி தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தொகை பெற்று தரப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து 5 பேரின் சடலங்களை போலீசார் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்