SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனிசாலை வசதி செய்து தராததால் தேர்தலை புறக்கணித்த கிராமத்தினர்

4/19/2019 5:20:56 AM

விருதுநகர், ஏப். 19: நான்கு வழிச்சாலையில்  இருந்து தனி சாலை வசதி செய்து தர 5 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை  இல்லாததை தொடர்ந்து பி.மீனாட்சிபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு  செய்தனர்.விருதுநகர்-சாத்தூர் இடையே நான்குவழிச்சாலை அருகே பட்டம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட  மருளுத்து கிராமத்தை அடுத்து பி.மீனாட்சிபுரம் கிராமம் உள்ளது. இங்கு 240  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 440 வாக்காளர்கள் உள்ள  பி.மீனாட்சிபுரத்திற்கு நான்குவழிச்சாலையில் இருந்து ரயில்வே கேட்டை கடந்து  மருளுத்து கிராமம் வழியாக 2கி.மீ தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நான்கு  வழிச்சாலையில் இருந்து கிராமத்திற்கு நேரடியாக ரயில்வே லையன் வழியாக ஒரு  கி.மீ தூரத்தில் பாதை அமைக்கலாம் என கடந்த 5 வருடங்களாக முதல்வர்,  கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர். கிராமத்திற்கு தனிப்பாதை அமைத்து  தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்ய இருப்பதாகவும் மனு  அளித்திருந்தனர். அதிகாரிகள் கிராம மக்களை கண்டு கொள்ளவில்லை.

இதை  தொடர்ந்து நேற்று தேர்தலை புறக்கணித்து கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளியில்  ஓட்டுப்போடவில்லை. தகவலறிந்த ஏஎஸ்பி சிவபிரசாத், தாசில்தார்  சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் கிராம மக்களை சமாதனம் செய்து, 20ம்  தேதிக்கு பிறகு சாலை கோரும் வழியில் உள்ள நிலங்கள் பற்றி ஆய்வு செய்து  சாத்தியக்கூறுகள் இருந்தால் செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.  அதைத்தொடர்ந்து கிராமத்தினர்  வாக்களித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்