SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

4/19/2019 5:20:48 AM

விருதுநகர், ஏப்.19: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்ற 89 மையங்களில் மார்ச் 1ல் துவங்கி மார்ச்.19ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் முதல்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் 1,200 என்பது மாற்றப்பட்டு நடப்பு ஆண்டு முதல் 600 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. அத்துடன் தமிழ், ஆங்கில பாடங்கள் முதல் தாள், இரண்டாம் தாள் என்ற நடைமுறையும் மாற்றப்பட்டு ஒரே தாளாக நடத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய 4 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 214 பள்ளிகளில் பயிலும் 11,088 மாணவர்கள், 12,586 மாணவிகள் என 23,674 பேர் எழுதினர். தனித்தேர்வர்களாக 281 மாணவர்கள், 434 மாணவிகள் என மொத்தம் 715 பேரும் எழுதினர். மாவட்டத்தில் மொத்தம் 11,369 மாணவர்கள், 13,020 மாணவியர் என மொத்தம் 24389 பேர் தேர்வெழுதி உள்ளனர்.தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.19) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in     அறிந்து கொள்ளலாம். தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு செல்போன் எண்ணிற்கு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.ஏப்.20ம் தேதி காலை 9 மணி முதல் ஏப்.26ம் தேதி வரை மாணவர்களுக்கு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் வழியாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்