SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இயந்திரங்கள் பழுது

4/19/2019 5:20:40 AM

விருதுநகர்,ஏப்.18: இயந்திரங்கள்  பழுது மற்றும் அலுவலர்களுக்கு தெளிவின்மையால் 30க்கும் மேற்பட்ட  வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாகவும், பாதியில் நின்றதால்  பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,881  வாக்குச்சாவடிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.  இந்த வாக்குக்குப்பதிவு துவங்கிய 7 மணிக்கு பல வாக்குச்சாவடிகளில்  இயந்திரங்கள் இயங்கவில்லை. விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் தந்திமரத்தெரு எஸ்எம்ஜி நகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில்  வாக்குப்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் வாக்கு இயந்திரம் பழுதானதால் 40  நிமிடம் தாமதம் ஏற்பட்டது. மீசலூர் உள்பட 30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில்  மின்னணு வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் மாற்று இயந்திரங்கள்  கொண்டு வந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அருப்புக்கோட்டை தொகுதி  குல்லூர்சந்தை வாக்குச்சாவடியில் மதியம் திடீரென வாக்குப்பதிவு  இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக  நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை  வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள்  கூறுகையில், பழுது என கூறப்பட்ட இயந்திரங்களில் ஒன்றிரண்டு இயந்திரங்கள்  தவிர அனைத்து இயந்திரங்கள் நல்ல நிலையில் தான் உள்ளன. புதிய அலுவலர்கள்  சிலருக்கு இயக்குவதில் பிரச்சனைகள் இருந்துள்ளது. வயரை முழுமையாக  பொருத்தாமல் இயங்கவில்லை அதனால் சிக்னல் கிடைக்கவில்லை. உடனே பழுது என  தெரிவித்துள்ளனர். மாற்று இயந்திரங்கள் வைக்கப்பட்டு உடனடியாக  வாக்குப்பதிவு துவங்கப்பட்டன. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 10  வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 13 விவிபேடு  இயந்திரங்கள் என 27 இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்