SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சுழியில் வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவும் தாமதம்

4/19/2019 5:20:19 AM

திருச்சுழி, ஏப்.19: திருச்சுழி அருகே வாக்கு இயந்திரம் பழுதானதால் வாக்கு பதிவு தாமதமானது.ராமநாதபுரம்  பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளான திருச்சுழி அருகே மேலையூரில்  வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரில் ஆண் வாக்காளர்கள் 475 பேரும்,  பெண் வாக்காளர்கள் 555 பேரும் உள்ளனர். நேற்று காலையில் முதன் முதலாக ஓட்டு  போடும் இளைஞர்களும், பெண்களும் காலையில் 6.30க்கு மணியளவில் ஆர்வத்துடன்  ஓட்டுப்போட வரிசையில் காத்திருந்தனர்.  பின்பு காலையில் 7 மணிக்கு  துவங்கும் என எதிர்பார்த்தநிலையில் திடீரென வாக்கு இயந்திரம் பழுதானதால் அதிகாரிகள்  என்ன செய்வதென்று அறியமால் திகைத்தனர். பின்பு உடனடியாக மண்டல அதிகாரி  ராமநாதனை வரவழைத்து வாக்கு இயந்திரத்தை சரி செய்த பின்னர் காலையில்  மீண்டும் 8.40க்கு தாமதமாக துவங்கியது. அதேபோல் இருஞ்சிறையில்  தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை  சரியானமுறையில் பொருத்தப்படாததால்  ஒருமணி நேரத்திற்கும் மேலாக வாக்களிக்காமல் பொதுமக்கள் காத்திருந்தனர்.  தர்மம் மற்றும் வடக்கு மடையில் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது திடீரென  இயந்திரங்கள்  பழுதானது. மீண்டும் சரி செய்யப்பட்டு வாக்களித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்