SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்காளர்களுக்கு முறையாக விநியோகம் செய்யாமல் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பூத் சிலிப்கள்

4/19/2019 5:10:08 AM

நாகர்கோவில், ஏப்.19: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பூத் சிலிப்புகள் விநியோகம் செய்யப்படாமலும் குப்பை தொட்டியில் வீசப்பட்டும் காணப்பட்டது என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினர்.முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சுரேஷ்ராஜன் நேற்று காலை 9 மணிக்கு நாகர்கோவில் டதி பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்குபதிவு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் கட்சியினர் வழங்கி வந்த பூத் சிலிப்புகளை தேர்தல் ஆணையமே வழங்கும் என்று கூறிவிட்டு 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பூத் சிலிப் வழங்கப்படவில்லை. இதனால் வாக்குபதிவு குறைய வாய்ப்பு உள்ளது. இது ஆணையத்தின் தவறான முடிவு ஆகும். தேர்தல் ஆணையம் எதனையும் செய்யலாம், எப்படியும் முடிவு எடுக்கலாம், யாரும் கேட்க கூடாது, அரசியல்வாதிகள் செய்வதுதான் தவறு என்று எண்ணுகின்றனர். இங்கு தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர் கலெக்டர். பூத் சிலிப் விநியோகத்தில் தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளம் கிராமத்தில் பூத் சிலிப் கொடுக்காமல் குப்பை தொட்டியில் வீசியுள்ளனர். நாங்கள் கொடுத்திருந்தால் நேரடியாக வாக்காளர்களிடம் கொடுத்திருப்போம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன்? தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.மேலும் ஆளுங்கட்சிக்கு சாதகம் இல்லாத இடங்களில் வாக்காளர் பட்டியல் பெயர்கள் நீக்கப்பட்டு வெளியிடுகிறார்கள். ஏற்கனவே பட்டியலில் பெயர் இருந்தும் கூடுதல் பட்டியல் வெளியிடுகிறார்கள், அதில் பெயர் இல்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது என்பது கண் கூடாக தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்