SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேச்சிப்பாறையில் வாக்களிக்க படகில் வந்த 50 கிராம மலைவாழ் மக்கள்

4/19/2019 5:09:57 AM

குலசேகரம், ஏப். 19: பேச்சிப்பாறை அணையை சுற்றியுள்ள மலைவாழ் மக்கள் படகில் வந்து வாக்களித்தனர்.குமரி மாவட்டம் பேச்சிப்பாறை  அணையை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. பழங்குடியின  மக்கள் வசிக்கும் இந்த மலை பகுதிகளில் தச்சமலை, தோட்டமலை, விளாமலை,  களப்பாறை, மாறாமலை போன்ற பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள்  வாக்களிப்பதற்காக பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில்  அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல வேண்டும்.
இவர்கள்  பேச்சிப்பாறை அணையை கடப்பதற்காக படகு சேவை உள்ளது. இந்த தேர்தலில்  வாக்களிப்பதற்காக இவர்கள் தங்கள் பகுதியில் இருந்து அதிகாலையிலேயே நீண்ட  தூரம் நடந்து அணைப்பகுதிக்கு வந்து படகு மூலம் அணையின்  மறுபக்கம் உள்ள பேச்சிப்பாறை பகுதிக்கு வந்து அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து  சென்று வாக்களித்து சென்றனர்.மலைப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட  வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வசதிக்காக அடுத்து வரும் தேர்தல்களில் அந்த பகுதியில் உள்ள  பள்ளிக்கூடங்கள் அல்லது சமூக நலக்கூடங்களில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்