SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்சில் வாக்குசாவடிகளுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளிகள்

4/19/2019 5:09:39 AM

நாகர்கோவில், ஏப்.19 : கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தொலைபேசியில் அழைத்தால் வீட்டிற்கே சென்று வாகனங்களில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்களித்த பிறகு அவர்கள் மீண்டும் வீடு திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதுபோன்று மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக தங்கியுள்ளவர்களை வாக்குசாவடிகளுக்கு அழைத்து சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துமனையில் இருந்து 3 வாகனங்களில் நோயாளிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
கேசவன்புத்தன்துறை, வழுக்கம்பாறை, முஞ்சிறை, என்ஜிஓ காலனி, மண்டைக்காடு போன்ற பகுதிகளுக்கு முதல்கட்டமாக 8 நோயாளிகள் வாக்குப்பதிவுக்காக அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒவ்வொரு வாகனத்திலும் அவர்களது உறவினர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனை போன்று மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வாக்குசாவடிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்