SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகர்கோவிலில் வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

4/19/2019 5:09:28 AM

நாகர்கோவில், ஏப்.19: மக்களவை தேர்தலை முன்னிட்டு நாகர்கோவிலில் நேற்று 97 சதவீதம் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இதுபோல் டீக்கடைகள்,  வெற்றிலை பாக்கு கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பாலமோர் சாலை, கேபி சாலை, கேப் சாலை உள்பட பல முக்கிய சாலைகள் வெறிச்ேசாடி காணப்பட்டன.
* வழக்கத்தை விட பஸ் மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்தும் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
* பூதப்பாண்டி, திருப்பதிசாரம், கிருஷ்ணன்கோயில் உள்பட பல கோயில்களில் தேரோட்டம் என்பதுடன் முகூர்த்த தினம் என்பதால், கிராமப்புறங்களிலும் காலையில் அதிகம் பேர் வாக்களிக்க வரவில்லை.
* புத்தளத்தில் காலை 8.45 மணி வரை வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதால் வேலை செய்யவில்லை. அதன்பின் வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குபதிவு தொடங்கியது.
* ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வாக்களார்கள் பெயர்கள் விடுபட்டிருந்தன. பலருக்கு பாகம் எண் மற்றும் வரிசை எண்கள் மாறி இருந்தன. இதனால் கடும் குழப்பம் ஏற்பட்டது.
* பூத் சிலிப் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்பதால், வாக்கு பதிவு மையங்களில் ஹெல்ப் டெஸ்கில் உள்ள பணியாளர்களிடம் அடையாள அட்டையை காண்பித்து, பூத் சிலிப் பெற கூட்டம் முண்டியடித்தது. இதனால் பல மையங்களில் பூத் சிலிப் மொத்தமாக அளித்து, தேடிப்பார்த்து எடுத்து செல்ல பணியாளர்கள் கூறினர். இதனால் குழப்பமான நிலை ஏற்பட்டது.
* காலை 9.45 மணியளவில் செட்டிக்குளம் சந்திப்பு கணபதி நகரில் பெரும் மோதல் நடப்பதாக பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் வந்தது. ஆனால் பத்திரிகையாளர்கள் அங்கு சென்ற போது அது வதந்தி என்பது தெரிய வந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

 • comic_consandiego111

  சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்