SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது..வாக்களிக்காமல் சென்ற வாக்காளர்கள்

4/19/2019 4:59:23 AM

திருவள்ளூர், ஏப். 19:திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது. இதனிடையே பல்வேறு வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானது.பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்பட்டு ஆதிதிராவிடர் நல பள்ளி 161வது வாக்குச்சாவடியில், காலை 7 மணிக்கு முதல் வாக்காளர் வாக்களிக்கச் சென்றார்.  நாடாளுமன்ற வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு, சட்டமன்ற வேட்பாளருக்கு வாக்களிக்கச் சென்றார்.அப்போது, பீப் சத்தம் கேட்கவில்லை. சோதனையில், மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு தொழில்நுட்ப அலுவலர்கள் வந்து மின்னணு இயந்திரத்தை சரி செய்தனர். இதனால், அங்கு 45 நிமிடம் தாமத மாக தேர்தல் துவங்கியது.காக்களூர் ஊராட்சியில் வாக்குச்சாவடி எண் 91ல் இயந்திர கோளாறு ஏற்பட்டது. அங்கு தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து இயந்திரத்தை சீர்செய்தனர். தொடர்ந்து, அந்த வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.

இதேபோல், தண்ணீர்குளம், நேமம், பிரயாம்பத்து ஆகிய வாக்குச்சாவடிகளில் இயந்திர கோளாறு காரணமாக அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடந்தது. வயலாநல்லூர் வாக்குச்சாவடியில் ஏஜெண்டுகள் தாமதமாக வந்ததால் 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. இதனால், வாக்காளர்கள் பலர் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்தனர். சிலர் வாக்களிக்காமலேயே வீடு திரும்பினர்.திருத்தணி:  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள, தரணிவராகபுரம் மற்றும் பெரியார் நகர் வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு இயந்திரங்கள் திடீர் பழுதான காரணத்தால் ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இயந்திரங்கள் சரி செய்த பின்னர், பொதுமக்கள் மீண்டும் ஆர்வமுடன் வாக்குகளை பதிவு செய்து சென்றனர். இதேபோல், கே.ஜி., கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறு சிறு இயந்திர கோளாறால் வாக்கு பதிவு பாதிக்கப்பட்டது.இதேபோல், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாபலூர் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. அங்கு, மண்டல தேர்தல் அலுவலர்கள் வந்து, இயந்திரத்தை சரி செய்தனர். அதன் பின்னர், வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்