SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவில் இரண்டு இயந்திரங்களால் புதிய வாக்காளர்கள் குழப்பம்

4/19/2019 4:58:44 AM

திருவள்ளூர், ஏப். 19: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு இயந்திரங்கள் பயன்படுத்தியதால் பெண்கள், முதியவர்கள், புதிய வாக்காளர்கள் குழப்பத்துடன் மாற்றி வாக்களித்தனர்.திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, அமமுக உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற முடியும். திருவள்ளூரில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் தலா இரண்டு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நோட்டா பட்டனுடன் சேர்த்து மொத்தம் 21 பட்டன்கள் இயந்திரங்களில் அமைக்கப்பட்டிருந்தது.வாக்குச்சாவடிகளில் இரண்டு இயந்திரங்களும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இயந்திரத்தில் உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் வரிசைப்படி இருப்பதை குறிக்கும் சுவரொட்டிகள் வாக்குச்சாவடி வாசலில் ஒட்டப்பட்டிருந்தது.இந்த சுவரொட்டிகள் மூலம் ஓட்டுப்போடும் வேட்பாளரது, பட்டனை கணக்கிட்டு ஓட்டுப்போட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்றனர். வாக்குச் சாவடிகளில் ஏஜன்ட்கள், வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்க்கும் அலுவலர், சீட்டு வழங்குபவர், மை வைப்பவர், கையெழுத்து பெறுபவர் என அனைவரையும் கடந்த பிறகு தான் வாக்களிக்கும் இயந்திரத்தை வாக்காளர் அடையமுடியும்.
படித்த ஆண்கள், பெண்கள் பலர் தைரியமாக சென்று சரியான பட்டனை அமுக்கிவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர். ஆனால், படிக்காத பெண்கள், முதியவர்கள், புதிய வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்படும் பரபரப்பு காரணமாக பதற்றத்துடன் இயந்திரத்தை அடைந்தனர்.

இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியின் உள்ளே நுழையும்போது, இரண்டாவதாக பயன்படுத்தப்படும் இயந்திரம் முதலில் இருக்கும். பதற்றத்தில் சென்ற பலர், இரண்டாவது இயந்திரத்தில் இருக்கும் பட்டன் எண்ணிக்கையை கணக்கிட்டு ட்டுபோட்டுவிடுகின்றனர். ஓட்டுப்போட்ட பிறகு தான் அய்யய்யோ! தவறாக அமுக்கி விட்டோமே என புலம்பிக் கொண்டே வெளியில் வருவதைக் காண முடிந்தது.இரண்டு இயந்திரங்களையும் ஒன்றின் கீழ் ஒன்றாக வைத்திருந்தால், பட்டனை எண்ணுவதற்கு வசதியாக இருந்திருக்கும். அருகருகே வைத்திருந்ததால் பதற்றத்தில் இரண்டாவது இயந்திரத்தி ஓடுப்போட்டுவிட்டோமே என பெண்கள் பலர் கவலையுடன் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்