SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்

4/19/2019 4:58:27 AM

திருவள்ளூர், ஏப். 19: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 9,49,684 ஆண்கள், 9,70,347 பெண்கள், 341 திருநங்கைகள் என 19,20,372 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரான, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், தேர்தல் பார்வையாளர் சுரேந்திரகுமார், மாவட்ட எஸ்.பி., பொன்னி ஆகியோர், வாக்குச்சாவடிகளுக்கு சென்று, வாக்காளர்கள் வாக்களிப்பதை பார்வையிட்டனர்.மேலும், 255 வாக்குச்சாவடிகளில், வெப்-கேமரா அமைக்கப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்பட்டது. பெரும்பாலான மையங்களில், சாமியானா ஏற்பாடு செய்யவில்லை. போதுமான நிழல் இல்லாததால், வாக்காளர்கள் வெயிலில் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும்பாலான வாக்குசாவடிகளில், குடிநீர் வசதி செய்யப்படாமல் இருந்ததால், வாக்காளர்கள் அவதிக்கு ஆளாகினர். காலை 6 மணிக்கு, கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில், காலை 6.45 மணிக்கே வாக்காளர்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர். தொடர்ந்து ஜனநாயக கடமையாற்ற வாக்காளர்கள் சாரை, சாரையாக வந்து வாக்களித்தனர். காலை 9 மணிக்கு பிறகு, பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்தனர். இத்தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க இரண்டு நிமிடம் கால அவகாசம் தேவைப்பட்டது.மேலம் வாக்கு சாவடிகளில் பீப் ஒலி தொடர்ந்து கேட்டபடியே இருந்தது. 20 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்தன. பூத் சிலிப் பெறாத வாக்காளர்களுக்கு உதவும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும், உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. விடுபட்ட வாக்காளர்கள், அடையாள அட்டையுடன் சென்று, தங்களது பூத் சிலிப்களைப் பெற்றுக்கொண்டனர்.தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கப்படாததால், பூத் சிலிப் பயன்படுத்தி வாக்களித்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், கட்சியினர் முன்னிலையில், ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் வாக்குப்பதிவு சரிபார்க்கப்பட்டது.கடைசியாக வாக்களித்தவரின் வரிசை எண் விவரத்துடன் எழுதி, 17ஏ பதிவேட்டில், கட்சி ஏஜன்டுகளிடம் கையொப்பம் பெற்று வாக்குப்பதிவு நிறைவு செய்யப்பட்டது. அதன்பின், ‘’கன்ட்ரோல் யூனிட்’’ மற்றும் ‘’பேலட் யூனிட்’’டுகள் சீலிடப்பட்டு தனித்தனி பெட்டிகளில் வைக்கப்பட்டன. ஒவ்வொரு பெட்டிக்கும், ‘’சீல்’’ வைத்து பெரிய தகர பெட்டியில் வைத்து சீலிடப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்