SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமுல்லைவாயலில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிப்பு; முன்னேற்பாடு இல்லை என புகார்

4/19/2019 4:58:16 AM

ஆவடி, ஏப். 19: ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியில் நடந்த தேர்தல் வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் 2 மணி நேரம் வரை வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பல இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள், தேர்தல் பணி அலுவலர்கள் அவதிப்பட்டனர்.திருவள்ளூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆவடி மற்றும் ஸ்ரீபெரும்புதுர் தொகுதிக்கு  உட்பட்ட அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்தன. இதில் ஆவடியில் 420 வாக்குச்சாவடி மையங்களும் அம்பத்தூரில் 340 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பகுதியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விருவிருப்பாக நடந்தது. பொதுமக்கள் அரை மணி நேரத்திற்கு முன்பே வாக்குச்சாவடிகளுக்கு வர தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க வாக்குக்குச்சாவடிகளில் முன்னேர்பாடு பணிகள் அறைகுறையாக இருந்தது. குறிப்பாக அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பல இடங்களில் அடிப்படை தேவையான குடிநீர் கூட இல்லை. நிழலுக்கு பந்தல்களும் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், வெயிலில் வந்த மக்கள் அவதிப்பட்டனர். அதேபோல வாக்கு மையங்களில் வீல் சேர்கள் இல்லாததால் வயதானவர்கள் தள்ளாடியபடி நீண்ட துரம் நடந்து வருவதையும், உறவினர்கள் அவர்களை கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வந்தனர். மேலும், பல மையங்களில் இருக்கைகள் இல்லை.

அதேபோல, பலருக்கு பூத் சிலிப் வழங்கப்பட வில்லை. அவர்களுக்கு அரசியல் கட்சியினர் துண்டு சீட்டில் பெயர், பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை எழுதி கொடுத்தனர்.அம்பத்தூர் சூரப்பட்டு மதுராமேட்டுரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு திருமணம் ஆன சாந்தராமு என்பவர் மாப்பிள்ளை கோலத்தில் வந்து வாக்களித்தார். அவருடன் மனைவி தீபாவும் இருந்தார்.வாக்குச்சாவடி மையகளில் இயந்திரம் கோளாறால் பூத்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இதில், திருமுல்லைவாயல், சோழம்பேடு நகராட்சி, பூத் எண் 100ல் அரைமணி நேரம் இந்திரம் பழுதானது,சி.டி.எச். சாலையில் உள்ள விவேகாந்தா பள்ளியில் பூத் எண் 121ல் ஒன்றரை மணி நேரம், வெங்கடேஸ்வரா பள்ளியில் அரை மணி நேரம், மிட்டினமல்லி தெலுங்கர் பள்ளியில் பூத் எண் 58ல் ஒரு மணி நேரம், அதேபகுதி அரசு பள்ளி பூத் எண் 66ல் 50 நிமிடம், பட்டாபிராம் அண்ணாநகர் அரசு பள்ளி புத் எண் 246ல் அரை மணி நேரம்,திருமுல்லைவாயல் செந்தில் நகரில் உள்ள கலைமகள் பள்ளியில் பூத் எண் 106ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் காலை 7 முதல் 9 மணி வரை 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.மேலும், திருநின்றவூர் நத்தம்பேடு புத் எண் 142ல் ஒரு மணி நேரம், கொரட்டூர் பக்தவச்சலம் கல்லூரி 166, 172ல் விவிபேட் இயந்திரம் பழுதானது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்