SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி தொகுதியில் 76.40 சதவீதம் வாக்கு பதிவு

4/19/2019 3:25:41 AM

கிருஷ்ணகிரி, ஏப்.19: நாடாளுமன்ற தேர்தலில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 76.40 சதவீதம் வாக்குகள் பதிவானது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தொகுதியில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளில் 7,72,614 ஆண் வாக்காளர்களும், 7,53,498 பெண் வாக்காளர்களும், 236 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15,26,348 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையோரம் அமைந்துள்ள தொகுதி என்பதால் எல்லையோர வாக்கு சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள வாக்கு சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொகுதி முழுவதும் போலீசார், துணை ராணுவத்தினர், கேரளா மாநில போலீசார், ஊர்காவல் படையினர் என மொத்தம் 3,650 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 9,804 வாக்கு சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட 18,274 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர்.ஏ.செல்லகுமார், அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் மதுசூதனன், மக்கள் நீதி மய்யம் சார்பில்  காருண்யா மற்றும் 11 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 1,850 வாக்கு சாவடிகளில் ஏக்கல்நத்தம் மலை கிராமத்தை தவிர அனைத்து வாக்கு சாவடிகளிலும் நேற்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது. முன்னதாக மாதிரி வாக்கு பதிவு அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடந்தது. இதனை தொடர்ந்து காலை 9 மணியளவில் 8 சதவீதமும், 11 மணியளவில் 20.54 சதவீதமும், மதியம் 1 மணியளவில் 41.24 சதவீதமும், மாலை 3 மணியளவில் 56.26 சதவீதமும் பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து வாக்கு பதிவு நடந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 65.7 சதவீதம் வாக்கு பதிவானது. இறுதியாக மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 76.40 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதுபோல்,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் திமுக சார்பில் சத்யா, அதிமுக சார்பில் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி உள்பட மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஓசூர் சட்டமன்ற தொகுதியில் 1,68,186 ஆண் வாக்காளர்களும், 1,59,009 பெண் வாக்காளர்களும், 99 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 3,27, 294 வாக்காளர்கள் உள்ளனர்.

ஓசூர் சட்ட மன்ற தொகுதியில் மொத்தம் 364 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் வாக்காளர்கள் வந்து ஓட்டுகளை பதிவு செய்தனர். நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஓசூர் சட்டசபை தொகுதிக்கு 9 சதவீத வாக்குகளும், 11 மணிக்கு 26.40 சதவீத வாக்குகளும், ஒரு மணிக்கு 34.8 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. மாலை 3 மணி அளவில் 55.22 சதவீத வாக்குகளும், 5 மணி அளவில் 60.16 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. இறுதியாக மாலை 6 மணிக்கு மொத்தம் 69.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்