SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

110 வயது முதியவர் உற்சாகம்

4/19/2019 3:25:25 AM

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிதாலுகா வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட எ.செட்டிப்பள்ளி கிராமத்தை  சேர்ந்தவர் ரங்கப்ப கவுடு(110). இவர்  மனைவி வெங்கட்டம்மா. இவர்களுக்கு 4 மகன்கள்,  2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி பேரன், பேத்திகள் உள்ளனர்.  நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று மதியம் கடும் வெயிலையும்  பொருட்படுத்தாமல், ரங்கப்ப கவுடு வீட்டில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள  அரசு தெலுங்கு நடுநிலைப்பள்ளிக்கு நடந்தே வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தள்ளாத வயதிலும் ஆர்வத்துடன் வாக்களித்த அவரை, தேர்தல் பணி அலுவலர்கள், கிராம  மக்கள் பாராட்டினர்.

 அதேபோல், கிருஷ்ணகிரி  தம்மண்ணன் நகர் 2வது கிராசை சேர்ந்தவர் அற்புதம்(101). ஓய்வு பெற்ற அரசு  பள்ளி ஆசிரியையான இவர், அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி  தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்.  இந்த முறையும், நாடாளுமன்ற தேர்தலில் தள்ளாத வயதிலும், தனது உறவினர்கள்  உதவியுடன் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி  வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் மூதாட்டி அற்புதம் வந்து  வாக்களித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்