SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதால் தாமதமாக தொடங்கிய வாக்கு பதிவு

4/19/2019 3:24:27 AM

கிருஷ்ணகிரி, ஏப்.19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதால், வாக்கு பதிவு தாமதமாக தொடங்கியது. கிருஷ்ணகிரி  நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று நடந்தது. மாதிரி வாக்கு பதிவு  முடிந்து, காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது. இதில், கிருஷ்ணகிரி நகரில்  வாக்குசாவடி எண் 132 மற்றும் ஆலப்பட்டி வாக்கு சாவடி எண் 103 ஆகிய வாக்கு  பதிவு மையங்களில், வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதானது. இதனால், இந்த இரு வாக்கு சாவடிகளிலும் சுமார் ஒரு  மணி நேரம் வாக்கு பதிவு செய்ய  காலதாமதமானது. இதே போல், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில்  வாக்கு சாவடி எண்.278ல் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு துவங்கியது.  இந்நிலையில் புளியம்பட்டியை சேர்ந்த வயதான கிருஷ்ணன் என்பவர் ஊன்றுகோல்  உதவியுடன் நடந்து வாக்கு பதிவு மையத்திற்குள் சென்றார். அப்போது ஊன்றுகோல்  மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்திற்கு செல்லும் வயர் மீது அழுத்தியதன்  காரணமாக வாக்கு பதிவு இயந்திரம் பழுதானது.
அதை  சரிசெய்த பின்னர், சுமார் அரைமணி நேரம் கழித்து வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்