SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆலங்குளம் அருகே இரவு 8 மணி வரை நீடித்த வாக்குப்பதிவு

4/19/2019 2:06:13 AM

ஆலங்குளம், ஏப். 19:  ஆலங்குளம் அருகே வாக்குப்பதிவு இயந்திரம் வேகம் குறைவாக செயல்பட்டதால், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதனால் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர். ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் கிராம மக்கள், வாக்களிப்பதற்காக அருகிலுள்ள புதுப்பட்டி பள்ளியில் வாக்குச்சாவடி எண் 38 அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டிருந்த வாக்கு இயந்திரம், காலை முதல் வழக்கத்தை விட வேகம் குறைவாக இயங்கியதால் ஒரு வாக்கை பதிவு செய்ய அதிக நேரம் ஆனது. இதனால் ஓட்டுப் போட வந்திருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்துவிட்டு சென்றனர். மாலை 6 மணிக்குள் வந்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டுபோட அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதும் இயந்திரம் மெதுவாகவே இயங்கியதால் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டுபோட்டனர். இந்த பூத்தில் மொத்தம் 1162 வாக்குகளில் 986 வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்