SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே பள்ளியில் இயங்கிய 7 பூத் வாக்காளர்கள் தள்ளுமுள்ளு

4/19/2019 2:05:50 AM

சுரண்டை, ஏப். 19:  சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16, 17, 18வது வார்டுகளுக்கு உட்பட்ட 291 முதல் 297 வரையிலான பூத் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பூத்துக்கு குறைந்தது 800 முதல் 1000 வரையிலான வாக்காளர்கள் உள்ளனர். ஒரே பள்ளியில் 7 பூத் அமைக்கப்பட்டதால், காலையில் வாக்காளர்கள் தங்களது பூத்தை கண்டுபிடிக்க திணறினர். சரியான வழிகாட்டுதல் இல்லாததால் வாக்களர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் ஒரே கட்டிடத்தில் அருகருகே பூத் அமைக்கப்பட்டதால் வரிசையில் நின்று வாக்களிக்க கூட இடமில்லாமல் வாக்காளர்கள் அவதிக்குள்ளாயினர். சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் 307வது பூத்தில் வாக்கு இயந்திரம் பழுதானதால் அரை மணி நேரத்திற்கும் மேல் வாக்குப்பதிவு தடைபட்டது. ஏறத்தாழ 200 வாக்குகள் பதிவான நிலையில் பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் அந்த இயந்திரம் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய மெஷின் மூலம் சீரான வாக்குப்பதிவு நடந்தது. இதனால் வாக்காளர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் 2வது வார்டிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தாமதமானது. இயந்திரம் சரியானதை தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. 287வது பூத்தில் வெயிலில் வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் முதலுதவி அளித்து வாக்களிக்க ஏற்பாடு செய்தனர். தகவலறிந்து வந்த தாசில்தார் ஹரிஹரன் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். மேலும் கிராமப்புற பள்ளிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் கழிவறை மற்றும் மின்வசதி இல்லாமல் பெண் தேர்தல் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்