SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைத்தேர்தலுடன் வேலூர் மக்களவைக்கு தேர்தல் நடத்த ஆரணியில் வாக்களித்த ஏ.சி.சண்முகம் கண்கலங்கியபடி பேட்டி

4/19/2019 1:58:30 AM

ஆரணி, ஏப்.19: அடுத்தமாதம் 19ம் தேதி தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவை தொகுதிகளுடன் வேலூர் மக்களவைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் நேரில் வலியுறுத்துவேன் என்று ஆரணியில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த ஏ.சி.சண்முகம் கண்கலங்கியபடி கூறினார். புதிய நீதி கட்சியின் தலைவரும், வேலூர் மக்களவை தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் நேற்று ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் உள்ள ஆதிபகவான் தொடக்கப்பள்ளியில் வாக்களிக்க வந்திருந்தார். அப்போது, அங்கிருந்த கட்சி தொண்டர்கள், அவரை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டித்தழுவியபடி துக்கம் தாக்காமல் அழுதுகொண்டனர். அவர்களை சமாதானம் செய்துவிட்டு ஏ.சி.சண்முகம் வாக்குச்சவாடிக்குள் சென்று வாக்களித்தார். பின்னர், நிருபர்களிடம் பேட்டியளிக்க வந்த ஏ.சி.சண்முகம் திடீரென கண்கலங்கினார். சிறிது நேரம் கழித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆரணி மக்களவை தொகுதியில் எனது வாக்கை பதிவு செய்தேன். 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் இந்த நாளில், வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. பிரதமர் மோடிக்கு வலிமை சேர்க்க கூடிய வேலூர் மக்களவை தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுடன் வேலூர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும். இதுகுறித்து டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையத்திடம் நேரில் வலியுறுத்த உள்ளேன். வேலூர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்த தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
(ெசய்திஎண்12) 15 லட்சம் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்