SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலங்கரிக்கப்பட்ட காரில் வருவாய் துறையினர் அழைத்து வந்தனர் 85 வயதில் முதல் முறையாக வாக்களித்த தொழிலாளி

4/19/2019 1:58:21 AM

வந்தவாசி, ஏப்.19: வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(85), விறகு வெட்டும் தொழிலாளி. இவரது குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். இவர்கள் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று விடுவதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாததால் இதுவரை யாரும் வாக்களிக்கவில்லை. இதையறிந்த கலெக்டர் கந்தசாமி கடந்த 15ம் தேதி அவரது வீட்டுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன்படி, கன்னியப்பன் தனது குடும்பத்தினருடன் அதே கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முதன்முறையாக நேற்று வாக்களித்தார். முன்னதாக வீட்டில் இருந்து ஒன்றரை கி.மீ. தூரம் உள்ள வாக்குச்சாவடி மைத்திற்கு வருவாய் துறையினர் அவரை அலங்கரிக்கப்பட்ட காரில் அழைத்து வந்தனர். இதையடுத்து, வாக்களித்துவிட்டு வந்த அவர்களை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி சந்தித்து கேட்டறிந்தார். அப்போது, அவர்கள் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருந்தது என கூறினர்.
(செய்திஎண்06) டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் நேரில் வலியுறுத்துவேன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்