SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்கு இயந்திர பேட்டரி சூடாகி வீங்கி செயலிழந்தது 2 மணி நேரம் ஓட்டு பதிவு நிறுத்தம்

4/19/2019 1:45:11 AM

மதுரை, ஏப். 19: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பேட்டரி சூடாகி, வீங்கி செயலிழந்தது. இதனால் 2 மணி நேரம் வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.    மதுரை தெப்பக்குளம் மீனாட்சி சுந்ரேசுவரர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 208வது பூத்தில், மொத்தம் 921 ஓட்டுகள் இருந்தன. காலை 10 மணி வரை 221 ஓட்டுகள் பதிவானது. அப்போது ஒரு வாக்காளர் ஓட்டுப்போட முயன்றபோது, கட்டுப்பாட்டு கருவியில் உள்ள பொத்தான் வேலை செய்யவில்லை. வாக்குச்சாவடி அதிகாரி எவ்வளவோ முயற்சி செய்தும், முடியவில்லை. உடனே 10.05க்கு ஓட்டு பதிவு நிறுத்தப்பட்டது. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் முயற்சி செய்தும், இயந்திரம் செயல்படவில்லை. பின்பு பெல் நிறுவன பொறியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.பிரேம்குமார் தலைமையில் வந்த பொறியாளர்கள் கட்டுப்பாட்டு இயந்திரத்தை பரிசோதனை செய்தனர். அப்போது இயந்திரம் மிகவும் சூடாக இருந்தது. இதனை கண்டு பொறியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இயந்திரத்தில் உள்ள பேட்டரி சூடாகி. மின் இணைப்பு துண்டித்துவிட்டது. இதுவரை இப்படி நடந்தது இல்லை. மின்னணு வாக்கு இயந்திரத்தில் பேட்டரி சூடாகி இயந்திரம் பழுதாவது முதல் முறை என பொறியாளர்கள் கூறினர். பின்பு பழைய இயந்திரம் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய மின்னணு வாக்கு இயந்திரம் கொண்டு வரப்பட்டு, வேட்பாளர்கள் ஏஜென்டுகள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, 2 மணி நேரத்திற்கு பிறகு 12.15 மணிக்கு வாக்குபதிவு துவங்கி நடந்தது. இதனால், வாக்காளர்கள் ஓட்டு போட சுமார் 3 மணி நேரம் காத்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்