SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியீடு

4/19/2019 1:44:26 AM

மதுரை, ஏப். 19: பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை தேர்வுத்துறையால் இன்று வெளியிடப்படுகிறது.  தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி மார்ச் 19ம் தேதி வரை நடந்தது. மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள மதுரை, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் ரெகுலர் மாணவர்கள் 35 ஆயிரத்து 74 பேரும், தனித்தேர்வர்கள் 101 பேரும் விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 35 ஆயிரத்து 175 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இதுதவிர, மாற்றுத்திறனாளிகள் 152 பேரும் தேர்வெழுதினர். இத்தேர்வை மாவட்டத்தில் உள்ள 513 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்காக 114 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.கடந்த ஆண்டு வரை 1200 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வு, இவ்வாண்டு முதல் 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது. அதனால், மொழிப்பாடங்கள் முதல்தாள், 2ம் தாள் என்று நடத்தப்படாமல், ஒரேதாள் தேர்வாக நடத்தப்பட்டது. தேர்வு பணிகளில் 114 முதன்மை கண்காணிப்பாளர்கள், 114 துறை அலுவலர்கள், 272 பறக்கும் படை உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.
 இந்நிலையில் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தபடி பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று (19ம் தேதி) காலை 9.30 மணியளவில் பள்ளி கல்வித்துறை தேர்வுத்துறையால் வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில், குறு செய்தி மூலம் மட்டுமே வெளியிடப்படுகிறது. அதன்படியே இவ்வாண்டும், தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கு ேதர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in போன்ற இணையதளத்திலும் காணலாம். பள்ளிகளுக்கும் ஆன்லைன் வழியாக மாணவர்களின் பாடம்வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்