SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை உளுந்து சாகுபடியில் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு ஆலோசனை

4/18/2019 5:34:15 AM

புதுக்கோட்டை, ஏப். 18: விவசாயிகள் கோடையில் நுண்ணீர் பாசனம் அமைத்து நீர் சிக்கனத்தை கடைபிடித்து கூடுதல் பரப்பில் பயறு சாகுபடி மேற்கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர்  சுப்பையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் தற்போது நடைபெறும் சித்திரை பட்டம்  கோடை உளுந்து சாகுபடி செய்திட உகந்த பருவமாகும். மிகக்குறைவான வயதுடைய பயறுவகை பயிரான உளுந்து  65-70 நாட்களில் பலன் தரக்கூடியது.  உளுந்து சாகுபடிக்கு தேவையான நீரின் அளவும் மிக குறைவு, அதாவது 350 மி.மீ போதுமானது.  நுண்ணீர் பாசனம் முறையில் சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர்பாசனம் அமைத்து நீர் சிக்கனத்தை கடைபிடித்து கூடுதல் பரப்பில் சாகுபடி செய்வதனால் குறைவான நீரில் உணவு உற்பத்தியினை அதிகரிக்கலாம்.   உளுந்து சாகுபடியில்  உயர் தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம்.

இப்பட்டத்தில் சாகுபடி செய்ய வம்பன் 6 மற்றும் வம்பன் 8 சிறந்த ரகங்கள் ஆகும்.  உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது.  இதனுடன் உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா தலா ஒரு பொட்டலத்தை தேவையான ஆறிய வடித்த கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.  மேலும் கூடுதல் மகசூலுக்கு பூக்கும் தருணத்தில் 2 சத டிஏபி கரைசல் அல்லது ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஓண்டர் நுண்ணூட்டம் 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். அது மட்டுமல்லாமல் உளுந்து பயிர் விண்ணில் உள்ள தழைச்சத்தினை வேர் முடிச்சுகளில் சேமிக்கின்றது.  இதனால் மண் வளம் மேம்படுகிறது.  இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பயிர்களுக்கு நல்ல பலனை கொடுக்கிறது.  உளுந்து சாகுபடியில் அறுவடைக்கு பின் பெறப்படும் உளுந்து செடி கால்நடைகளுக்கு மிக சிறந்த புரத உணவாகும்.  இதனை சேமித்து வைத்து கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தலாம்.  கோடை உளுந்து சாகுபடியில் நுண்ணீர் பாசன முறையான சொட்டுநீர், மழைத்தூவான் அல்லது தெளிப்பு நீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துவதால் நீர் தேவையினை பெருமளவு குறைக்கலாம்.
எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சித்திரை பட்டத்தில் கோடை உளுந்து சாகுபடி செய்து குறைவான நீரில் குறைவான  நாட்களில் அதிகப்படியான மகசூல் பெற்று பயனடையலாம். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ilavarsar_pakisthn111

  பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

 • kavan_manavai11

  அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

 • seuol_expooo1

  தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

 • pumbkin_comp111

  அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

 • bday_day11

  ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்