SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விசைப்படகுகள் தடைக்காலம் எதிரொலி வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

4/18/2019 5:33:47 AM

மணமேல்குடி, ஏப்.18: மீன் பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால் கட்டுமாவடி, மணமேல்குடி பகுதிகளில் மீன்களின் விலை உயர்ந்தது.புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் மற்றும் நண்டு கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி,  சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும்  மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து  வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன் வரத்து குறைந்து அதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடி தடைக்காலமானது 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக கடல்பகுதிகளில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மடி வலைகளை பயன்படுத்தி கடலுக்குச் செல்ல முடியாது. இதனால் சில மீனவர்கள் கணவாய் தூண்டி,  முரல்வலை, செங்கனி வலை, கெண்டை வலை, நண்டு வலைகள் போன்றவற்றை பயன்படுத்தி கரையோரங்களில் மீன் பிடிக்கின்றனர். இதனால் மீன் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
இதனால் கட்டுமாவடி, மணமேல்குடி மீன் மார்க்கெட்டுகளில் கெண்டை, பாறை, தாளஞ்சிரா, நண்டு, இறால், கணவாய், முரல்,செங்கனி  போன்ற மீன்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இறால் ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400 முதல் 450  ரூபாய்க்கும்,  நண்டு ஒரு கிலோ 250 ரூபாயிலிருந்து 300 முதல் 350 ரூபாய்க்கும், கெண்டைமீன் ஒரு கூறு 150லிருந்து 250 முதல் 300 ரூபாய்க்கும், செங்கனி  ஒரு கிலோ 300 முதல் 400 ரூபாய்க்கும்,  முரல் ஒரு கூறு 200-லிருந்து 320 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாயிலிருந்து 450 முதல் 500 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது.இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைக்காலத்தில் மடி வலைகளை பயன்படுத்தி தரைபகுதியை அரிக்கக்கூடிய வலைகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீரின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய நண்டு வலை, செங்கனி வலை, கெண்டை வலை போன்றவற்றிற்கு எந்த தடையும் இல்லை. இதனால் இறால் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. மற்ற வகை மீன்கள் சிறிதளவு மட்டுமே வலையில் சிக்கும். இதனால் மீன் விலை அதிகரித்துள்ளது. தடை காலம் முடிந்த பிறகு விலை பழைய  நிலைக்கு திரும்பும் என்றனர்.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்