SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெற்றோரை மீறி காதல் திருமணம் செய்த அண்ணனை வெட்டிக்கொன்ற கொடூர தம்பி கைதுகுடிபோதையில் வெறிச்செயல்

4/18/2019 5:33:40 AM

மண்ணச்சநல்லூர், ஏப்.18:   சமயபுரம் அருகே பெற்றோரை மீறி காதல் திருமணம் ெசய்த அண்ணனை 4 ஆண்டுகளுக்கு பின் வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவரது மகன் ரெங்கராஜ்(25), எலக்ட்ரீசியன். இவருக்கு கார்த்திக் என்ற ஒரு அண்ணனும் ஆனந்த் என்ற ஒரு தம்பியும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரெங்கராஜ், கூத்தூர் பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரி (23) என்பவரை காதலித்தார். காதலுக்கு ரெங்கராஜின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் எதிர்ப்பை மீறி ரெங்கராஜ் காதலியை திருமணம் செய்துகொண்டார். மேலும் அவர் கூத்தூரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரெங்கராஜ் மட்டும் தனியாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு ரெங்கராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் மது குடித்துள்ளனர்.  அப்போது ரெங்கராஜின் காதல் திருமணம் குறித்து குடிபோதையில் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் திடீரென்று வீட்டில் இருந்த அரிவாளால் அண்ணன் ரெங்கராஜின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த ரெங்கராஜை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரெங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.
   இது குறித்து சமயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரெங்கராஜின் தம்பி ஆனந்த்தை கைது செய்தனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்