SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை உள்பட 150 வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் கேமரா கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக கண்காணிக்கப்படும்

4/18/2019 5:29:45 AM

பெரம்பலூர், ஏப்.18: பெரம்பலூர் மாவட்டத்தில் பதட்டமான, நெருக்கடியான 88 வாக்குச்சாவடிகள் உள்பட 150வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாகக் கண்காணிக்க வெப் ஸ்ட்ரீமிங் முறையில் 150 வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இன்று நடைபெறுகிற பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) சட்டமன்றத்தொகுதி மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் நடைபெற்ற கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படையில் பதட்டமானவை மற்றும் பதிவான வாக்குகளில் 90சதவீதத்திற்கு மேல் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் நெருக்கடியானவை என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற  தொகுதியில் மொத்தமுள்ள 332 வாக்குச்சாவடி மையங்களில் 36வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை எனவும், 4வாக்குச்சாவடி மையங்கள் நெருக்கடியானவை எனவும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 320வாக்குச்சாவடி மையங்களில் 47வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 1வாக்குச்சாவடி மையம் நெருக்கடியானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 2சட்டமன்றத் தொகு திகளில் 83வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகவும், 5வாக்குச்சாவடிகள் நெருக்கடி யானவைகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக, பொதுத்தேர்தலின்போது மேற்கண்ட 88 வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல்நடத்த ஏதுவாக 88சிஆர்பிஎப் படைப்பிரிவு போலீசாருடன் கூடுதலான போலீஸாரைப் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதி வாக்குப்பதிவுகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவுசெய்யப்படும். இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாகும். ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தலில் முதன்முறையாக பதட்டமான, நெருக்கடியான வாக்குச்சாவடிகளோடு 2 சட்ட மன்றத் தொகுதிகளில் மொத்தமுள்ள 652 வாக்குச்சாவடிகளில் நெட்கனெக்சன் வசதியுள்ள மேலும் சில வாக்குச்சாவடிகளென மொத்தம் 150வாக்குச் சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் என்கிறமுறையில் கேமராவில் பதிவாகும் வாக்குப்பதிவு விபரங்களை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து சட்டம்ஒழுங்கு மற்றும் விதிமீறல்களை ஒழுங்குபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 150 வாக்குச் சாவடிகளுக்கும் வெப் கேமராக்களை கையாளக்கூடிய 150 தேர்தல் பணி அலுவலர்கள் புதிதாக  பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட தேசியத் தகவல் மையஅலுவலர் வெங்கட்கிருஷ்ணன் செய்துள்ளார். இது அடுத்துவரும் தேர்தல்களில் அனைத்து வாக்குச் சாவடி களையும் தேர்தல்கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்பதற்கான பரீட்சார்த்த நடைமுறையாகும்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்