SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேன் மோதி மூதாட்டி பலி

4/18/2019 5:29:38 AM

தா.பழூர், ஏப். 18: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பனையடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி ராமாஞ்ஜம் (65). இவர் நேற்று முன்தினம் தனது மகன் கணேசன் ஆகிய இருவரும் பைக்கில் ஜெயங் கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் ரோட்டில் காய வைத்த கடலை  மூட்டையை எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.அப்போது கடலை மூட்டையை எடுக்க மகன் சென்றிருந்தார் .தாய் ராமாஞ்ஜம் சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த சரக்கு வேன் ராமாஞ்ஜம் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்தவரை அருகில் இருந்தவர்கள்  மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் ராமாஞ்ஜம் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அவரது மகன் கணேசன் (40) தா.பழூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்  எஸ்ஐ  தினேஷ் குமார் சரக்கு ஆட்டோ  ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிலால் கிராமத்தை சேர்ந்த முருகன்  (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்