SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெயில் கொடுமை அதிகம் வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்கும் பணி

4/18/2019 5:29:32 AM

பெரம்பலூர்,ஏப்.18: 100டிகிரிக்கு மேலாக தினமும் பட்டையைக் கிளப்பும் உச்சி வெயிலால்  வாக்காளர்களில் முதியோர், பெண்களுக்கு வாக்குச்சாவடிகளில்  வாக்களிக்க வசதியாக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர்(தனி) சட்டமன்றத்தொகுதியில் 332வாக்குச்சாவடிகள், சிதம்பரம் பாராளு மன்றத்தொகுதிக்கு உட்பட்ட குன்னம்சட்டமன்றத் தொகுதியில் 320சட்டமன்றத் தொகு திகள் எனமொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் அதிகப்பட்சமான வெப்பநிலை நலவி, மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் மிகுந்தஅச்சருத்தலாகவே உள்ளது. இதில் குறிப்பாக மார்ச்மாதத் தொடக்கத்திலிருந்து ஏறக்குறைய ஒன்றரை மாதமாக 100டிகி ரிக்குக் குறையாதவெப்பநிலையே காணப்படுகிறது.

இதனால் (18ம்தேதி) இன்று நடத் தப்படும் பாராளுமன்றத்தேர்தலில் வாக்களிக்கவரும் முதியோர், பெண்கள்வரிசை யில் காந்திருந்து மயங்கிவிடாமல் இருப்பதற்காக வாக்குச்சாவடிகளின்முன்பாக சாமியானா பந்தல்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அமைக்கப்பட்டுள்ளது.வீடுகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்களில் வந்துவிடும் மாற்றுத்தி றனாளிகள் இந்தப்பந்தல்களில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துகூட வாக்களிக்கச்செல்லலாம் என தேர்தல்ஆணையம் இந்தஏற்பாடுகளைச் செய்துள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்