SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவலர்கள் யாருக்கும் ஆதரவாக செயல்பாடு கூடாது காரைக்கால் எஸ்எஸ்பி அறிவுறுத்தல்

4/18/2019 5:22:43 AM

காரைக்கால், ஏப்.18:  நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் காவலர்கள் விருப்பு வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். யாருக்கும் ஆதரவான செயல்பாடு கூடாது. என, மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் அறிவுறுத்தியுள்ளார்.நாளை நடைபெறும் மக்களவை தேர்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ராந்த் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் பேசியது: நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் நடத்தை விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. அதனால், காவலர்கள் விருப்பு வெறுப்பின்றி பணி செய்ய வேண்டும். யாருக்கும் ஆதரவான செயல்பாடு கூடாது.  காவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள நடத்தை விதிகளையும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளையும் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அதிகாரியின் எழுத்துப்பூர்வ கடிதம் இல்லாமல், வாக்குச் சாவடிக்குள் காவல் அதிகாரிகள், காவலர்கள்  செல்லக்கூடாது. என அறிவுறுத்தியதோடு, காவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்த விளக்க கையேட்டினை வழங்கினார்.

தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ராந்த்ராஜா பேசியது:நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில், காவல்துறையினரின் பணி மிக முக்கியமானது. மிகுந்த கவனமும், நேர்மையான பணியும் அவசியம். தேர்தல் பணியிலிருக்கும் காவலர்கள் செல்பேசியைத் தவிர்த்து, காவல்துறை வழங்கியுள்ள வாக்கி டாக்கி மூலம் பேசவேண்டும். தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஒலி பெருக்கி பயன்படுத்தக்கூடாது.  பணியிலிருக்கும் காவலர்கள் யாரிடமும் அரசியல் ரீதியாகவோ, மற்ற விஷயமாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும். வாக்களிக்கச் செல்வோரிடம் கண்ணியமாக நடந்துகொள்வது மிகவும் முக்கியம். வாக்களித்துவிட்டு வருவோரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று யாரும் கேட்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திட காவல்துறையினரின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றவேண்டும் என்றார்.கூட்டத்தில், மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், எஸ்.பிக்கள், மாரிமுத்து, வீரவல்லபன், ஐஆர்பிஎன் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam-5

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்

  • 06-12-2019

    06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • cambodiyaa_insects1

    கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்

  • saxophomne_chinaaa

    40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!

  • jayalalitha_admk11

    இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்