SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி மக்களவை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் 4,000 போலீஸ், துணை ராணுவம் குவிப்பு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது

4/18/2019 4:35:35 AM

திருச்சி, ஏப்.18: திருச்சி மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. திருச்சி மக்களவை தொகுதியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ரங்கம், திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருச்சி மக்களவை தொகுதியில் 7,39,843 ஆண்கள், 7,68,972 பெண்கள், 148 திருநங்கைகள் என 15 லட்சத்து 8,963 வாக்காளர்கள் உள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் திருநாவுக்கரசர், அதிமுக கூட்டணியில் தேமுதிக இளங்கோவன், அமமுக சாருபாலா, மக்கள் நீதி மய்யம் ஆனந்தராஜா உள்பட 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவை தேர்தலுக்காக ரங்கத்தில் 339, திருச்சி மேற்கில் 271, திருச்சி கிழக்கில் 258, திருவெறும்பூரில் 294, கந்தர்வக்கோட்டையில் 237, புதுக்கோட்டையில் 261 என திருச்சி தொகுதி முழுவதும் 1,660 வாக்குச்சாவடிகள் உள்ளன.  ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு விவிபேட் கருவி என தலா 1,660 இயந்திரங்களும், 24 வேட்பாளர்கள் என்பதால் 2 பேலட் யூனிட் (மின்னணு வாக்குப்பதிவு கருவி) வீதம் 3,320 கருவிகளும் பயன்படத்தப்பட உள்ளன. தவிர 673 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 374 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 516 விவிபேட் இயந்திரங்களும் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன.

சின்னம் பொருத்தி தயார் நிலையிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 83 வகையான தேர்தல் பொருட்கள் அடங்கிய பைகள் அந்தந்த சட்டமன்ற தொகுதி தலைமையிடமான அரியமங்கலம் கோட்டம் மற்றும் தாலுகா அலுவலகங்களிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் நேற்று காலை நடந்த இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு அவரவர் ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இப்பயிற்சி வகுப்பில் அவர்கள் தபால் ஓட்டு அளித்தனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை அலுவலர் 3 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 1,200 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடியில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலரும் பணியில் ஈடுபடுவர். வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் பூத்சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்றும் வாக்களிக்கலாம்.

வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வெயிலிலிருந்து பாதுகாக்க சாமியான பந்தல் போடப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதி, ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு சக்கர நாற்காலி, சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.  மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருபவர் மட்டுமே வாக்களிக்க முடியும். அதிகளவு வாக்காளர் 6 மணிக்குள் வந்தால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். ஓட்டுப்பதிவுக்குப்பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீலிட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறை பூட்டி சீல் வைக்கப்படும். பாதுகாப்பு மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு 4,000க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மே 23ம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்