SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வணிக நிறுவனங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை தந்து வாக்களிக்க செய்ய வேண்டும் வணிகர் சங்கங்கள் பேரமைப்பு வேண்டுகோள்

4/18/2019 4:35:15 AM

திருச்சி, ஏப்.18:  வணிக நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து வாக்களிக்க செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.  17வது இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று (18ம் தேதி)  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது. வாக்களிப்பதற்கு வசதியாக அன்றைய தினம் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் 18ம் தேதி அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வாக்களிக்க வகை செய்ய வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.

 இத்தேர்தலில் வணிக பெருமக்கள், வியாபாரிகள், வாக்களிக்க தகுதியுள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வண்ணம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். அதுபோலவே அரசு ஆணையை பின்பற்றி வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தங்கள் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய முழு விடுமுறை அளித்து அவர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வணிக நிறுவனத்தினர் ஆவண செய்திட வேண்டுமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்