SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் பாதுகாப்பு பணியில் 3,358 பேர் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்

4/18/2019 4:19:31 AM

நாகர்கோவில், ஏப்.18 : கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 3,358 பேர் ஈடுபடுகிறார்கள். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக எஸ்.பி. நாத் கூறினார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்குபதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். மொத்தம் உள்ள 1,694 வாக்கு சாவடிகளில் 208 வாக்கு சாவடிகள் பதற்றமான வாக்கு சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த வாக்குசாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மொத்தம் 791 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட மொத்தம்  8,552 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், விவி பேட் இயந்திரம் மற்றும் மை உள்ளிட்ட  அனைத்து பொருட்களும் நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்புடன் மொபைல் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 5 கம்பெனி துணை ராணுவம் (370 பேர்), 1,464 போலீசார், 560 முன்னாள் ராணுவ வீரர்கள், 385 ஊர்க்காவல் படையினர் உள்பட மொத்தம் 3,358 பேர் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு நேற்று காலை முதல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தவிர சட்டமன்ற தொகுதி வாரியாக ஏ.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் தலைமையில் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் நேற்று  மாலை முதல் ரோந்து பணியை தொடங்கினர். இன்று மாலை வரை தொடர்ந்து இவர்கள் ரோந்து பணியில் இருப்பார்கள்.  33 காவல் நிலையங்களுக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் வீதம் தனியாக ரோந்து படையினர் உள்ளனர். பிரச்னைக்குரிய இடங்களுக்கு இவர்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக எஸ்.பி. நாத் போலீஸ் அதிகாரிகளுடன் இறுதி கட்ட ஆலோசனை மேற்கொண்டார். போலீசார் விழிப்புடன் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறி உள்ளார்.  குமரி - கேரள எல்லையில் 39 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் இருந்து மது வகைகள் கொண்டு வரப்படுகிறதா? என்பதும் கண்காணிக்கப்படுகிறது. இதே போல் தனியார் படகுகள் மூலம் போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு கடலோர பகுதிகளிலும் கண்காணிக்கிறார்கள்.

இது குறித்து எஸ்பி. நாத் கூறுகையில், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 3,358 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.  வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு எந்திரங்கள் கோணத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்