SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்காளர்களுக்கு பூத் சிலிப் முறையாக வழங்கவில்லை

4/18/2019 4:19:03 AM

நாகர்கோவில், ஏப். 18:  வாக்காளர்களுக்கு பூத் சிலிப் சரிவர வழங்கப்படவில்லை என்று கலெக்டரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலரிடம் தேர்தல் முகவர் சேவியர் ஜெயசதீஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையம் மூலமாக கன்னியாகுமரி தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கொடுக்கப்பட வேண்டிய பணியில் மிகப்பெரிய மெத்தனம் காணப்படுகிறது. பூத் சிலிப் ஒழுங்காக கொடுக்கப்படவில்லை என்று பல இடங்களில் இருந்து வாக்காளர்கள்  என்னிடம் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக மாவட்டம் முழுவதும் பூத் சிலிப் விநியோகிக்கும் பணியாளர்கள் பாஜ மற்றும் ஆளும் கட்சி நபர்களுடன் சேர்ந்து அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் பூத் சிலிப் கொடுத்து வருகின்றனர்.

இது ஒரு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. உடனே இதனை மனதில் கொண்டு போர்க்கால அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் பூத் சிலிப் சென்றடைந்திட ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பா.ஜ கட்சியினர் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக இரு சக்கர வாகனத்தில் சென்று பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். எனவே பணம் பட்டுவாடா செய்வதை தடுத்து நிறுத்தி நேர்மையான தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்,ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்