SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோவாளை அருகே மின் கம்பத்தில் மோதி கார் கவிழ்ந்தது

4/18/2019 4:17:18 AM

ஆரல்வாய்மொழி, ஏப்.18:  தோவாளை அருகே நேற்று அதிகாலை கார் கட்டுப்பாட்டை இழந்த சாலையோர மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் 2 துண்டானது. குழித்துறையை அடுத்த காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் எமோசர்ஜின்(40). இவர் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். தோவாளை அடுத்த மயிலாடி விலக்கு பகுதியில் உள்ள பாலத்தில் வந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் 2 துண்டாக உடைந்தது. எனினும் கார் நிற்காமல் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரை ஓட்டிவந்த எமோசர்ஜின் பலத்த காயத்துடன் கிடந்தார். இந்த நிலையில் விபத்து பற்றி அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து காரில் காயத்துடன் இருந்த எமோசர்ஜினை மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்
படுகிறது. தொடர்ந்து போலீசார் மின்கம்பம் உடைந்தது குறித்து தோவாளை மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஊழியர்கள் சம்பவ இடம் வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.இதனிடையே ஆரல்வாய்மொழி போலீசாரும் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கார் ரெக்கவரி வேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்