SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் தொகுதியில் பதற்றமாக கண்டறியப்பட்டுள்ள 172 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிப்பு

4/18/2019 4:04:15 AM

சேலம், ஏப்.18: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. சேலம் தொகுதியில் 172 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில், வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் முழுஅளவில் நிறைவடைந்துள்ளன. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 4,242 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,228 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,390 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இவை வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரியின் அறைகள், தேர்தல் பார்வையாளர் ராஜேஸ் மஞ்சு, தேர்தல் அதிகாரி ரோகிணி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று காலை திறக்கப்பட்டது.

பின்னர், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள, 164 மண்டல அலுவலர்களிடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன. அத்துடன், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நியமிக்கப்பட்டுள்ள போலீசார், ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் முன்னாள் ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை 1, நிலை 2, நிலை 3 என 8,656 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வாக்குச்சாவடிகளை ஒதுக்கீடு செய்து, பணி ஆணை நேற்று மதியம் வழங்கப்பட்டது. இவர்கள் நேற்று மாலையே, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் தேர்தல் பணியை தொடங்கினர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துவங்குகிறது.

இதுகுறித்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறுகையில், ``சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக சேலம் மாவட்டத்தில் 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சி-விஜில் ஆப் மூலமாக 131 புகார்கள் மற்றும் இலவச எண் மூலமாக 108 புகார்கள் வரப்பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் 15,784 பேருக்கும் தபால் ஓட்டு மற்றும் தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தலையில் சுமந்து செல்லும் நிலை இருந்தது. தற்போது அந்த இடம் உள்பட 46 மலை கிராமங்களுக்கும், உரிய வசதிகள் செய்யப்பட்டதால், அனைத்து பகுதிகளுக்கும் வாகனங்களில் இயந்திரங்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது,’’ என்றார்.

வெப்கேமரா மூலம் கண்காணிப்பு:

சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை, 172 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் 172 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அனைத்து வாக்குச்சாவடிகளும், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெப்-கேமரா இயக்கும் பணிகளில் பட்டதாரிகளும், கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர, சேலம் தொகுதியில் உள்ள 779 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு
சிறப்பு ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் 16,102 மாற்றுத்திறன் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென 1,169 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எளிதில் வந்து செல்ல ஏதுவாக, சாய்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், வெயில் நேரத்தில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகளில் பந்தல் போடப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில்  
செல்பி எடுக்க தடை

வாக்குப்பதிவையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது
*அரசியல் கட்சிகள், கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் ஆகியோர் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவுக்குள், கட்சி கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது.
*வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்குச்சாவடிக்குள் செல்போன் உள்ளிட்ட எந்த விதமான பொருளையும் எடுத்துச் செல்ல கூடாது.
*வாக்காளர்கள், யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரத்தை வெளியில் சொல்ல கூடாது. ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
*அரசியல் கட்சிகள், கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள், முகவர்கள், வாக்காளர் உள்பட யாரும் வாக்குப்பதிவு இயந்திரங்களையோ, வாக்களிப்பதையோ புகைப்படம் எடுக்க கூடாது.
*இதேபோல், வாக்காளர்கள் செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீங்க புதுசா ஓட்டு போடுறீங்களா?
இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 8.25 லட்சம் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்கின்றனர். இதனால் பல்வேறு சந்தேகங்களை கொண்டுள்ளனர்.
1. முதலில் வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர், வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரையும், நீங்கள் கொண்டு சென்ற அடையாள அட்ைடயையும் சரிபார்ப்பார்.
2. இரண்டாவதாக, உங்களது கையில் அழியா மை வைக்கப்பட்டு, 17ஏ படிவத்தில் கையொப்பம் பெறப்படும்.
3. மூன்றாவதாக உள்ள அதிகாரி, அந்த 17ஏ படிவத்தை பெற்றுக் கொண்டு, மை வைக்கப்பட்டதை உறுதிசெய்து, உங்களை வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள பகுதிக்கு அனுமதிப்பார்.
4. வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அவருக்கு நேராக உள்ள பட்டனை அழுத்தி, வாக்கினை பதிவு செய்ய வேண்டும். வாக்கு பதிவானதும் பீப் ஒலி கேட்கும்.
5. பின்னர், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேட் கருவியில் தெரியும் சின்னத்தை பார்த்து, நீங்கள் வாக்களித்த வேட்பாளருக்கு தான், உங்கள் வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்