SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 5,200 போலீசார்

4/18/2019 4:03:58 AM

சேலம், ஏப். 18: நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் சேலம் மாவட்டத்தில் 5200 பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் 2ம் கட்டமாக இன்று (18ம் தேதி) காலை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு  5 கம்பெனி துணை ராணுவமும், மாநகர் போலீசுக்கு 3 கம்பெனி துணைராணுவம் வந்துள்ளது. இவர்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல் படையினர், என்சிசி,மாணவர்கள் மற்றும் உள்ளூர் போலீசார், மாவட்ட ஆயுதபடையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், கேரளா ஆயுதப்படையினர் என 5 ஆயிரத்து 200 பேர் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதுகுறித்து தேர்தல் பிரிவு போலீசார் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு\ சேலம் மாவட்டத்தில் 5 கம்பெனி துணை ராணுவமும், ேகரளா ஆயுதப்படை ஒரு கம்பெனியும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3 கம்பெனியும், முன்னாள் ராணுவத்தினர்,ஓய்வு பெற்ற போலீசார், ஊர்காவல் படை, என்சிசி மாணவர்கள் என மொத்தம் 3140 பேரும், மாநகரில் 3 கம்பெனி துணை ராணுவமும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2 கம்பெனியும் என மொத்தம் 2115 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், என்றனர்.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்