SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு வரத்து சரிவால் இடைப்பாடி சந்தையில் காய்கறி விலை உயர்வு

4/18/2019 4:03:14 AM

இடைப்பாடி, ஏப்.18: சுட்டெரிக்கும் வெயிலுக்கு வரத்து சரிவால், இடைப்பாடி சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்தது. சேலம் மாவட்டம் இடைப்பாடியில் வாரந்தோறும் புதன்கிழமை கூடும் வாரச்சந்தை பிரசித்தம். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் காய்கறி, பழங்களை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். நேற்று நடைபெற்ற சந்தைக்கு காய்கறி வரத்து சரிந்து. இதனால், விலை அதிகரித்தது. பீன்ஸ் கிலோ ₹80க்கும், கேரட் ₹40க்கும், பீட்ருட் ₹30க்கும், கோஸ் ₹25க்கும், முள்ளங்கி ₹20க்கும், கத்தரிக்காய் ₹30க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சின்ன வெங்காயம் கிலோ ₹25க்கும், பெரிய வெங்காயம் ₹15க்கும், மிளகாய் ₹30க்கும், இஞ்சி ₹110க்கும், தக்காளி 27 கிலோ பெட்டி ₹400க்கும், தர்பூசனி ₹20 முதல் ₹120க்கும் விற்பனையானது. பானை ஒன்று ₹70 முதல் ₹300க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று ₹4300 முதல் ₹5200 வரையிலும் விலை போனது. ஆக மொத்தம் நேற்றைய சந்தையில் ₹22 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு காய்கறி வரத்து சரிந்ததால் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்