SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு

4/18/2019 4:02:58 AM

சேலம், ஏப்.18: சேலம் மாவட்டத்தில் நாளை வெளியாகும் பிளஸ் 2 ரிசல்ட்டை எதிர்நோக்கி, 40 ஆயிரம் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் 1ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 18,734 மாணவர்கள், 21,334 மாணவிகள் என 40,068 பேர் இத்தேர்வினை எழுதினர். தேர்வுகள் கடந்த மாதம் 19ம் தேதி நிறைவடைந்த நிலையில், மாவட்டத்தில் 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்தது. இப்பணிகள் முடிந்து, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து, நாளை காலை 9.30 மணிக்கு தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வெளியாகிறது.  மாணவர்கள், தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும், அவர்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ள, செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், தேர்வு முடிவு அனுப்பப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்