SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாவட்டத்தில் 1,850 மையங்களுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

4/18/2019 3:35:32 AM

கிருஷ்ணகிரி, ஏப்.18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1850 வாக்கு சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (18ம் தேதி) நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 1,850 வாக்குச்சாவடி மையங்களுக்கு, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் இருந்து மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆர்டிஓ அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவை நேற்று மதியம் 1 மணிக்கு அரசியல் கட்சி  நிர்வாகிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் சரவணன் முன்னிலையில் அறையின் சீல் அகற்றப்பட்டு, 307 வாக்குப்பதிவு மையங்களுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட், விவிபேட் மற்றும் வாக்கு பதிவு மையத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை, தேர்தல் அலுவலர், துப்பாக்கி ஏந்திய போலீசார் என ஒவ்வொரு வாகனத்திலும் ஏற்றி அனுப்பினர். முன்னதாக வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பல்வேறு நிலை அலுவலர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.  இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தளி சட்டமன்ற தொகுதியில் 212 வாக்குப்பதிவு மையங்களில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான மின்னணு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கான பொருட்கள், நேற்று தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து, தளி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் முரளி, தாசில்தார் முத்துபாண்டி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சுரேந்தர் ஆகியோர் முன்னிலையில்,  28 மண்டலங்களாக பிரித்து,  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சூளகிரி: வேப்பனஹள்ளி சட்டமன்ற  தொகுதியில் உள்ள 301 வாக்கு சாவடிகளுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை, நேற்று சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அரசியல் பிரமுகர்கள், வேப்பனஹள்ளி தொகுதிக்கான தேர்தல்  அலுவலர் குணசேகரன், உதவி தேர்தல் அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தொகுதியில் வாக்கு சாவடி மையங்களில்  900 பேர் தேர்தல் அலுவலராகவும், பாதுகாப்பு பணியில் 600  மேற்பட்ட போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடவுள்ளனர்.

வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி ஒன்றியத்தில்  உள்ள 65 வாக்குப்பதிவு மையங்களில், 97 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சிரமமின்றி வாக்களிக்க,  சக்கர நாற்காலிகள், வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து  நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி  மற்றும் அலுவலர்கள் சரி பார்த்து, அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி  வைத்தனர்.

கிருஷ்ணகிரி  மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாரலப்பள்ளி ஊராட்சியில் ஏக்கல்நத்தம் மலை கிராமம் உள்ளது. இங்கு மொத்தம் 463 வாக்குகள்  உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, அடிப்படை வசதிகள்  செய்யவில்லை என கூறி, கிராம மக்கள் ஓட்டு போடாமல் தேர்தலை  புறக்கணித்தனர். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, வேட்பாளர்கள் கிராம மக்களை நேரில் சந்தித்து குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்போம் என உறுதி அளித்தனர். இதையடுத்து சட்டமன்ற  தேர்தலின் போது வாக்கு பதிவு நடந்தது. ஆனால், வனத்துறையினர் அனுமதி அளிக்காததால், இன்று வரை இந்த கிராமத்திற்கு சாலை வசதி  ஏற்படுத்தவில்லை. இதனால், இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க போவதில்லை என ஏக்கல்நத்தம் கிராம மக்கள்  தீர்மானம் நிறைவேற்றிர். இதையறிந்த அரசு அலுவலர்கள், அந்த கிராம  மக்களிடம் சமாதானம் பேசியுள்ளனர்.

 இந்நிலையில், சாலை  வசதி இல்லாததால் சின்னசக்கனாவூர் என்ற கிராமம் வரை,  வாக்கு சாவடிக்கு  தேவையான பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட், வி.வி.பேட் என இரண்டு செட்  இயந்திரங்களை, நேற்று எடுத்து சென்ற அலுவலர்கள், அங்கிருந்து மலைப்பாதையில் ஏக்கல்நத்தம் கிராமத்துக்கு தலை மீது இயந்திரங்களை சுமந்து 5 கி.மீ தூரம் நடந்து சென்றனர். இதில்  மண்டல அலுவலர் ஸ்ரீதர், உதவி மண்டல அலுவலர் பிரான்சிஸ், தேர்தல் அலுவலர்  வெங்கடேசன், உதவி அலுவலர்கள் மகேந்திரன், கோபாலன், விஜயராஜ், எஸ்ஐ ரகீம்,  பெண் போலீஸ் ஒருவர், துப்பாக்கி ஏந்திய கேரளா போலீஸ் என மொத்தம் 10 பேர்  நேற்று மாலை 4 மணிக்கு சென்றனர். ஆனால், தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்களா என்பது இன்று காலை தான் தெரியவரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்