SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லையோர சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

4/18/2019 3:35:15 AM

கிருஷ்ணகிரி,  ஏப்.18:  நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மாநில எல்லையோர சோதனை சாவடிகளில்  துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல்  இன்று (18ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, மாவட்ட காவல் துறையினர்,  தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், கேரள மாநிலத்தை சேர்ந்த  அதிரடிப்படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உட்பட 3 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தேர்தலின் போது,  எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க, ஒவ்வொரு காவல் நிலையத்திலும்  மூன்றாக பிரித்து, வேற்று மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில்,  அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்கு சாவடிகளில்  கூடுதல் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறிவிப்பை  மீறி மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு  சாவடிகளில் 100 மீட்டருக்கு உள்ளாக எவ்வித வாகனமும் அனுமதிக்கப்பட  மாட்டாது. அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. மீறும்  பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தலையொட்டி  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 306  நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில எல்லையோர சோதனை  சாவடிகளில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மாவட்டத்திற்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களும், முழுமையான பரிசோதனைக்கு  பின்னரே அனுமதிக்கப்படும். அனைத்து சோதனை சாவடிகளும் சிசிடிவி கேமரா மூலம்  கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமரா  பொருத்தப்பட்டு, சென்னையில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு  வரப்படுகிறது.  இவ்வாறு எஸ்பி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்