SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஆர்ஓ பேச்சுவார்த்தையில் சமரசம் 14 கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்

4/18/2019 3:35:00 AM

போச்சம்பள்ளி, ஏப்.18:  பாலேகுளி ஏரியில் இருந்து, குள்ளம்பட்டி  திம்மநாயக்கன்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுசெல்வதற்கான ஆய்வுப்பணிகள், ஒரு மாதத்தல் தொடங்கப்படும் என கிருஷ்ணகிரி டிஆர்ஒ உறுதியளித்ததை அடுத்த, 14 கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி, சந்தம்பட்டி, மின்டிகிரி, கோடியூர், ஆலேரஹல்லி உள்ளிட்ட 14 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், குள்ளம்பட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, கடந்த வாரம் 300க்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று கூடினர்.  அப்போது குள்ளம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பட்டி ஏரிக்கு கடந்த 30 வருடமாக தண்ணீர் விட எந்த அரசியல் தலைவர்களும் முயற்சி செய்யவில்லை எனக் கூறி, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா தலைமையில் கிராம மக்களிடையே சமரச  பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் குமார், மத்தூர் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் குள்ளம்பட்டி, சந்தம்பட்டி, மின்டிகிரி, கோடியூர், ஆலேரஹல்லி உள்ளிட்ட 14 கிராம மக்கள்  300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பொதுமக்களிடையே வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. எனவே, அனைத்து மக்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கிராம மக்கள், எங்கள் பிரச்னையை தீர்க்க  முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே வாக்களிப்போம் என்றனர். இதனால் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இந்நிலையில் நேற்று குள்ளம்பட்டியில், கிருஷ்ணகிரி டிஆர்ஓ சாந்தி தலைமையில், பாரூர் பெரிய ஏரி பாசன உதவி செயற்பொறிளார் முருகேசன், ஆர்.ஐ. பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் பால்பாண்டியன் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமகவுண்டர் ஆகியோர் முன்னிலையில் கிராம மக்களிடம் 2ம் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் ஒரு மாத காலத்துக்குள் பாலேகுளி ஏரியில் இருந்து காட்டகரம் வழியாக குள்ளம்பட்டி திம்மநாயக்கன்பட்டி ஏரிக்கு சர்வே செய்து, அதில் பொதுப்பணித்துறை, நிலஅளவர், வருவாய் துறை மற்றும் விவசாயிகள் கமிட்டி அமைத்து, மிக விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிக்கு தண்ணீர் கேட்கும்  தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்  என டிஆர்ஓ சாந்தி உறுதியளித்தார். இதனால் சமாதானமடைந்த, 14 கிராம மக்கள், தங்களது தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மேலும், இன்று நடைபெறும் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதாக அதிகாரியிடம் உறுதியளித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • milkashake1111

  பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்