SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வயல்களில் கோடை உழவு மூலம் கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்

4/18/2019 3:34:18 AM

பள்ளிபாளையம், ஏப்.18: கிணற்று பாசன வசதியுள்ள வயல்களில் கோடை உழவு செய்வதால், மண்ணில் மறைந்துள்ள கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் அசோக்குமார் கூறியதாவது:
கோடை உழவு செய்வதால் மண் வளம் அதிகரிக்கும். அடுத்த சாகுபடிக்கான உரத்தேவை குறையும். மண்ணில் மிருது தன்மை அதிகரிப்பதால், நீரை நிலத்தில் தக்க வைக்கலாம். பூமிக்குள் மழைநீர் சேமிக்கப்படுவதால் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு, மண்ணின் சத்துக்கள் அங்கேயே நிலையாக இருக்கும். மண்ணுக்கடியில் உள்ள அந்து பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள், மண்ணின் மேல் பகுதிக்கு வருவதால், அவற்றை காகம் உள்ளிட்ட பறவைகள் உணவாக்கி கொள்ளும். இதனால், பயிர் பருவத்தில் பூச்சி நோய் தாக்குதல் குறையும். களைகளின் வேர்ப்பகுதி களையப்படுவதால், மீண்டும் களைகளின் முளைப்பு திறன் குறைந்து கட்டுப்படுகிறது.


மண்ணின் இறுக்கம் குறைவதால் மண்புழுக்கள் அதிகரிக்கிறது. மண்ணின் வளம் கூடி பயிர்களுக்கு அதிக மகசூல் கிடைக்கும். எனவே, கிணற்றுபாசன விவசாயிகள் தற்போதைய நீரை கொண்டு தங்கள் வயல்களில் கோடை உழவு செய்ய வேண்டும். ஈரோடு, திருப்பூர், கரூர், விழுப்புரம் மாவட்டங்களில் மக்காசோளம், நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. கோடை உழவு செய்வதால் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும். இதனால், எதிர்வரும் பருவத்தில் ஏற்படும் படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கலாம். மக்காச்சோளத்தில் அதிக தழைச்சத்தினை இடுவதால், படைப்புழு தாக்குதலை தவிர்க்கலாம். விதை நேர்த்தி செய்வதால், படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறை, பயிர் சுழற்சி முறை, விளக்கு பொறி ஆகியவற்றை பயன்படுத்தி, படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்