SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமங்கலத்தில் காலாவதியான 500 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

4/18/2019 2:33:33 AM

திருமங்கலம், ஏப். 18: திருமங்கலத்தில் காலாவதியான 500 கிலோ கோழி இறைச்சியை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, திருமங்கலத்தில் நேற்று அனைத்து ஆடு இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டன. கோழி இறைச்சிக் கடைகள் சில திறந்திருந்தன. இதனிடையே, நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் சிக்கந்தர் தலைமையிலான குழுவினர் கோழி இறைச்சிக் கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விருதுநகர் சாலையில் உள்ள ஒரு இறைச்சி கடையில், ஐஸ்பெட்டிகளுக்குள் இறந்த கோழிகளின் 500 கிலோ இறைச்சியை பதப்படுத்தி வைத்திருந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம். இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை நகராட்சி அலுவலகத்தில் பினாயிலை ஊற்றி அழித்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘கறிக்கோழி கோழி வளர்க்கும் நிறுவனங்கள் வாகனங்கள் மூலம் கோழிகளைக் கொண்டு வந்து கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர். இதில் வாகனங்களில் வரும்போதே கோழிகள் இறந்துவிடுகின்றன. இந்த கோழிகளின் இறைச்சிகளை ஐஸ்பெட்டிகளில் வைத்து, கடைக்காரர்கள் விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. இதன்பேரில், காலாவதியான இறைச்சிகளை பறிமுதல் செய்துள்ளோம். குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் இம்மாதிரியான இறைச்சிகளை உண்டால் உடலுக்கு உபாதை ஏற்படும். இதேபோல, பாக்கெட் சிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டாம்’ என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்