SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோழவந்தானில் திருக்கல்யாண கோலாகலம்

4/18/2019 2:33:21 AM

சோழவந்தான், ஏப். 18: சோழவந்தான் அக்ரகாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோயிலில், ராமபக்த சபா சார்பில் 47ம் ஆண்டு ராமநவமி மஹோத்ஸவம் 5 நாட்கள் நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 7 மணிக்கு உஞ்சவிருத்தி, 10 மணிக்கு சீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சீதாதேவி,   ராமபிரான் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இரவு சிறப்பு அலங்காரத்தில் சீதாராமர் வீதிஉலா நடந்தது. இதேபோல, தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோயில் மற்றும் மன்னாடிமங்கலம், திருவாலவாயநல்லுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பொதுவாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடக்கும்போது, சைவக் கோயிலான தென்கரை, மன்னாடிமங்கலம், திருவாலவாய நல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களிலும் திருக்கல்யாணம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு ராவநவமியை முன்னிட்டு, வைணவக் கோயிலான அக்ரஹாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோயிலில் நடைபெற்ற சீதா-ராமர் திருக்கல்யாணமும் ஒரே நாளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்